மொழிப்பாடத்திட்டத்திற்கான நோக்கங்களும், மாணவர்களுக்குப் பயன்படும் விதங்களும்
PSO – 1
செய்யுள்:

  • தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்தல்
  • வாழ்வியல் விழுமியங்களை இலக்கியங்களின் வாயிலாகப் புகட்டுதல்
  • இலக்கியங்களின் பாடுபொருள் மாற்றம், வளர்ச்சிநிலை, வடிவம், மரபுநிலை மாற்றங்கள் குறித்து அறியச் செய்தல்

PSO – 2
உரைநடை:

  • தமிழ்;மொழியின் சொல்வளமும், பொருள்நிறைந்த சொற்களும், சொற்களின் நுண்மையும், சிறப்பையும் அறிந்து கொள்ளச் செய்தல்
  • தற்கால சமுதாயச் சூழலுக்குத் தீர்வு காணுவதற்கு ஏற்ற வகையில் கட்டுரைகளை
    அமைத்தல் (பெண்ணியம், வாழ்வியல், சுற்றுச்சூழல், அறிவியல்;, அறவியல், பக்திநெறி, பண்பாடு)

PSO – 3
இலக்கணம்:

  • தமிழ் இலக்கணத்தின் இன்றியமையாமையை உணர்த்துதல்
  • தமிழ் மொழியின் முழுவடிவத்தை அறிந்து கொள்ளச் செய்தல்
  • தமிழ் மொழியினைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் துணைபுரிதல்
  • அரசுப்பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கணம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்துதல்
  • தமிழ்;வழி கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசு வேலையில்
    முன்னுரிமை பெறச்செய்தல்

PSO – 4
படைப்பாக்கம் ஃ ஆளுமைத்திறன் ஃ வாழ்வியல் கல்வி

  • படைப்பாக்கத்திறனை மேம்படுத்தி ஊடகத் துறையில் வேலை வாய்ப்பிற்கு
    ஊக்கப்படுத்துதல்
  • மொழிபெயர்ப்புப் பயிற்சியின் வாயிலாக ஆங்கில மொழியிலிருந்து தமிழை எழுத, பேச,
    கற்கப் பயிற்சியளிக்கப்படுகிறது
  • ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், வாழ்வியல் சார்ந்த பல்வேறு தகவல்களை
    அறிந்த கொள்ளவும் ஊக்கப்படுத்துதல்.

PSO – 5
இலக்கியவரலாறு:

  • தமிழ் இலக்கியங்களின் வரலாற்றுப் பின்புலத்தினையும், அவற்றினை இயற்றிய ஆசிரியர்களைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி குறித்தும் அறிந்து கொள்ளச் செய்தல்
  • அரசுப் பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கியம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்தல்

PSO – 6
அடிப்படைத்தமிழ்

  • பகுதி – 1 இல் இதர மொழி பயின்ற மாணவர்களுக்கு மூன்று மற்றும் நான்காம் பருவத்தில் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழப்; பாடத்திட்டம் அமைத்துக் கற்றறியச்
    செய்தல்.