Blood donation
பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் ரோட்டராக்ட் அமைப்பும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையும் இணைந்து 10.03.2022 அன்று Benefactor என்னும் பெயரில் ரத்ததான முகாமை நடத்தியது.
கல்லூரி முதல்வா் முனைவா் ரெ.முத்துக்குமரன் தலைமை தாங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனா். ரத்ததானம் வழங்கிய மாணவா்களுக்கு அரசு சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை என்.ஜி.எம். ரோட்டராக்ட் ஒருங்கிணைப்பாளா்கள் முனைவா் எஸ்.முத்துக்குமாரவேல், மோ.நந்தகோபு மற்றும் ரோட்டராக்ட் அமைப்பின் மாணவப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா். இந்நிகழ்வில் நிர்வாக மேலாளா் ரகுநாதன் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவா் (பொள்ளாச்சி கிளை) டாக்டா் திருமூா்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.